Pages

Wednesday, May 19, 2010

இளைஞன் திரைபடத்தில் நடிக்க நமீதாவை சிபாரிசு செய்தவர் முதல்வர்

1 comments
 
இளைஞன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு நமீதா ஒப்பந்தம் ஆகி உள்ளார். கவர்ச்சி நிறைந்த அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகைகள் தேர்வு நடைபெற்றது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நமீதா சிபாசு செய்யப்பட்டார். அவரை சிபாசு செய்தது வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் கருணாநிதி தான். முதல்வரின் இந்த யோசனையை ஏற்ற இளைஞன் பட டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும், ஹீரோ பா.விஜய்யும் நமீதாவை முடிவு செய்தனர். பின்னர் நமீதாவிடம் கதை சொல்லி, கதாபாத்திரம் பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். கதையை கேட்ட நமீதாவும் உடனே ஓ.கே., சொல்லி விட்டாராம். தற்போது இளைஞன் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது. பட பிடிப்பு குழுவுடன் விரைவில் நமீதாவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.மார்டின் தயாரிக்கும் இளைஞன் படத்திற்கு கலைஞர் கருணாநிதி, கதை வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

One Response so far.

  1. jeyamaran க்கு வாழ்த்துகள்

Leave a Reply