டி.ராஜேந்தருடன் "வீராசாமி” படத்தில் நடித்தவர் பத்மா. இப்படத்தில் வில்லியாக வந்தார். பின்னர் பத்து பத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு பத்மாவின் வாழ்க்கை திசை மாறியது. ஆபாசபட மிரட்டல் வழக்கில் சிக்கி கோர்ட்டு படியேறினார். தற்போது அதிலிருந்து விடுதலையாகி லஸ்யா என பெயரை மாற்றி மீண்டும் நடிக்க வந்துள்ளார். திரையுலகில் மறுபிரவேசம் பற்றி அவர் கூறுகிறார்.
பணம், பதவி இரண்டும் கொண்ட ஒரு பெரிய மனிதனின் ஆசை வார்த்தையில் மயங்கி அவருடன் பழகினேன். அவரது அன்பை உண்மை என்று நம்பினேன். ஆனால் என் இளமை, அழகு, உடல் சுகத்துக்காகத்தான் அவர் பழகினார் என்ற உண்மை தெரிய அதிர்ந்தேன்.
சினிமாக்காரி என் ஆசைநாயகியாக இருந்து கொள் என்று கேவலமாக பேசியதால் அவரை விட்டு விலகினேன். சில நாட்கள் கழித்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். அதை நம்பி மீண்டும் அவருடன் பழகினேன். ஒருநாள் என்னை வரவழைத்து நானும் அவரும் பழகிய நாட்களில் நெருக்கமாக இருந்தபோது திருட்டுத்தனமாக எடுத்த சில ஆபாச படங்களை லேப்டாப்பில் போட்டு காண்பித்தார்.
வாழ்நாள் முழுவதும் ஆசைநாயகியாக இருக்க வேண்டும். மறுத்தால் இந்த படங்களை இண்டர்நெட்டில் போடுவேன். உன் மானம் போய்விடும். பெற்றோர் தற்கொலை செய்வார்கள் என்று மிரட்டி பிளாக்மெயில் செய்தார். நான் பயப்படவில்லை. பிறகு டெலிபோனில் மிரட்டினார். அதை செல்போனில் பதிவு செய்தேன். அதுவே அவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எனக்கு உதவியது. அவர் என் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுதலையானேன்.
கடந்த ஆறு மாதமாக மனவேதனையாலும், மனஅழுத்தத்தாலும் வெளி உலகில் தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி அழுதேன். இப்போது அதில் இருந்து மீண்டும் விட்டேன். தற்போது புழல், மனஉறுதி, ஏழுச்சாமி, 7வது நாள் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்று பத்மா கூறினார்.
Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)