Pages

Thursday, May 27, 2010

பிரிக்கும் முடிவில் மனைவி பிரிந்தால் இரக்கும் முடிவில் காதலி பிரபு- நயன்தாரா காதல்

2 comments
 
பிரபுதேவா - நயன்தாரா ஜோடி திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கும் நிலையில் நயன்தாராவுடன் காதல் வயப்பட்டார். நயன்தாராவும் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு ஆறுதலுக்காக பிரபுதேவாவிடம் நட்பாக பழக ஆரம்பித்து மனதை பறிகொடுத்தார். காதல் ஜோடிகளாக சென்னைக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கும் பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டால், அது எங்கள் சொந்த விஷயம், பர்சனல் கேள்விகள் வேண்டாமே... என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறார்கள்.


நயன்தாராவுக்கு, பிரபுதேவா வைர டாலர் பதித்த தங்க சங்கிலியை காதல் பரிசாக ‌கொடுத்தார். நயன்தாராவோ, பிரபுதேவாவின் ‌பெயரை பச்சை குத்தி காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்‌‌போவதாகவும் அவ்வப்‌போது செய்திகள் வெளியாகி வருகின்றன.


இந்நிலையில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என பிரபுதேவாவின் மனைவி ரமலத் முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக தமிழ்திரையுலக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ரமலத் முறையிட்டார். ``என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்'' என்று அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதைக்கேட்டு உருகிப்போன அந்த பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, பஞ்சாயத்து பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, ``நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால்... நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்'' என்று கூறிவிட்டாராம். இதையடுத்து பஞ்சாயத்து பேச வந்தவர்கள் நயன் - பிரபு விவகாரத்தை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 Responses so far.

  1. bishal says:

    THIS IS VERY TOOOO MUCH..........

  2. Jeyamaran says:

    என்ன பண்றது Too muchனு உங்களுக்கு தெரியுது அவுங்களுக்கு தெரியலையே

Leave a Reply