இந்த வருடம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய ஒரே படம், பையா. பையாவுக்குப் போட்டியாக வந்திருக்கிறது ஹரியின் சிங்கம். ஆம், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் சிங்கத்தின் வசூல் கர்ஜனைதான் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.
அள்ளிட்டோம் அசத்திட்டோம் என்று சானல்களும், பத்திரிகைகளும் உடுக்கடித்தாலும் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்து அவர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுப்பது சில படங்கள்தான். விஜய்யின் கடைசி ஆறு படங்களால் 30 கோடி ரூபாய் நஷ்டம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதிலிருந்து இந்த உண்மையை ஒருவர் அறிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் அயன் படத்துக்குப் பிறகு மாபெரும் வெற்றிப்படமாக சன் பிக்சர்ஸுக்கு அமைந்திருப்பது சிங்கம் படம்தான். அளவுக்கதிகமான ஆக்சன் என்று குறைபட்டுக் கொண்டாலும் வெளியான முதல் மூன்று தினங்கள் நூறு சதவீத கலெக்சனை அள்ளியிருக்கிறது சிங்கம். இப்படியே போனால் அயன் படத்தின் வசூலை எளிதாக சிங்கம் முறியடிக்கும் என்கிறார்கள்.
Readmore...