நடிகர் விஜய் மிகவும் திறமைசாலி என்றும், சூர்யா அவரது மனைவிக்கு சிறந்த கணவராக விளங்குவதாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
ரெண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகி, அருந்ததி படம் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவர் தொடர்ந்து தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது விக்ரமோடு தெய்வ திருமகள் திரைபடத்தில் நடித்துள்ளார் தெய்வ திருமகள் படத்தில் நடித்த அனுபவம் மற்றும் அவருடன் நடித்த நாயகர்கள் பற்றியும் அனுஷ்கா உற்சாகமாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
தெய்வ திருமகள் மிகவும் வித்தியாசமான படம் இது. 5 வயது சிறுவனின் மனநிலை கொண்ட இளைஞனுக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை. ஆனால் எல்லா பாத்திரங்களுக்குமே சமமான முக்கியத்துவம் உள்ள வகையில் கதை அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடித்த பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமானது என்று சொல்லும் வகையில் எனது பாத்திரம் அமைந்துள்ளது.
வேட்டைக்காரனில் விஜய்யோடு நடித்தேன். விஜய் மிகவும் திறமைசாலி. ஆனால் அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சூர்யா மிகச் சிறந்த நடிகர். படப்பிடிப்பில் 100 சதவீத ஈடுபாட்டோடு நடிப்பார். சிறந்த நடிகராக இருப்பதோடு, மனைவிக்கு சிறந்த கணவனாகவும், மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார். விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பு அசாத்தியமானது. ஆனால் அதையும் மீறி அவர் பணிவோடு இருக்கிறார் என்றார்.
Thursday, July 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
ஜெயமாரன்...நிறைய எழுதுங்கள்...உங்கள் பதிவுலக வாழ்வு வளர வாழ்த்துக்கள்...
முடிந்தால் என் வலைப்பக்கமும் வரவும்...
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
Tamil Cinema News