Pages

Tuesday, July 12, 2011

விஜய் இயக்கத்தில் விரைவில் அஜித்

0 comments
 
மதராச பட்டணம் இயக்குனர் விஜயின் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்துக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
கிரீடம் படத்தின் மூலம் விஜயை இயக்குனராக அறிமுகப்படுத்தினார் நடிகர் அஜித். இருவரும் மீண்டும் இணையப் போகிறார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது.
மதராசப் பட்டணம் படத்தை பார்த்ததில் இருந்தே, விஜயுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று அஜித் கூறி வந்தாராம். ஆனால், அதற்குள் பில்லா 2 படம்தான் அஜித்தின் அடுத்த படம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், விஜயை அழைத்துப் பேசிய அஜித், ஆக்ஷன் கதை இருந்தால், நாம அடுத்த படம் பண்ணலாம் என்று கூறியிருக்கிறார். அஜித்துக்காக சுடச்சுட ஆக்ஷன் கதையை ரெடி பண்ணிய விஜய், அதை அஜித்திடம் கூறியிருக்கிறார்.
கதையை கேட்டு அசந்து போன அஜித், படத்தை விரைவில் தொடங்கச் சொல்லி அன்பு கட்டளை இட்டிருக்கிறார்.
படப்பிடிப்பு ஏற்பாடுகளில் தற்போது விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார்.

Leave a Reply