சிங்கப்பூரில் இருந்து தீபிகா படுகோனிடம் பேசிய ரஜினிகாந்த், விரைவில் ‘ராணா’ ஷூட்டிங் தொடங்கும் என்று கூறியுள்ளார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, அங்குள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார் ரஜினிகாந்த். உடல்நிலை குணமாகிவரும் ரஜினி, ‘ராணா’ படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது, ‘உடல் குணமாகிவருகிறது. விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும். சொன்ன நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்காவிட்டாலும் விரைவில் நல்லபடியாக தொடங்கும். உடனடியாக சென்னைக்கு திரும்பமுடியவில்லை. தனிமையாக இருக்க வேண்டும் என்பதால் சிங்கப்பூரிலேயே இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார் ரஜினி.
இதை உறுதிபடுத்திய தீபிகா, ரஜினியுடன் பேசியது இனிமையான அனுபவம். அவருடன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் தினத்தை ஆவலாக எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார். ‘ராணா’ படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகரிடம் கேட்டபோது, ‘மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிப்பது பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம். செப்டம்பரில் கண்டிப்பாக ஷூட்டிங் தொடங்கும்’ என்றார். ‘ரஜினியின் உடல்நிலை பற்றி வந்த வதந்திகள் அவரை பாதித்துள்ளது. அதை போக்க நினைக்கும் ரஜினி, அதற்காகவே விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்க நினைக்கிறார். இதன் காரணமாகத்தான் தீபிகாவிடமும் ரஜினி பேசியுள்ளார்’ என்று ‘ராணா’ பட வட்டாரங்கள் தெரிவித்தன.
source:
dinamalar
Saturday, July 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)