Pages

Saturday, July 10, 2010

நயன்தாராவை போல இருக்கும் நடிகை மேக்னா

0 comments
 
கவிதாலயம் தயாரித்து, ஸெல்வன் டைரக்டு செய்த `கிருஷ்ணலீலை' படத்தில், ஜீவன் ஜோடியாக அறிமுகமானவர், மேக்னா. இவர், `வைதேகி காத்திருந்தாள்' பட கதாநாயகி பிரமிளா ஜோசாயின் மகள். `கிருஷ்ணலீலை' படம் திரைக்கு வர தாமதமான நிலையில், மேக்னா நடித்த இரண்டாவது படம் `காதல் சொல்ல வந்தேன்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய திரையுலக பிரபலங்கள் அனைவரும் மேக்னா, நயன்தாராவைப்போல் இருக்கிறார் என்று பாராட்டினார்கள்.

இதுபற்றி மேக்னாவிடம் கேட்கப்பட்டது. ``தோற்றத்தில் நயன்தாராவுடன் உங்களை ஒப்பிடுவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, மேக்னா அளித்த பதில்:-

``எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். நான், நயன்தாரா மாதிரி இருக்கிறேனா? என்று எனக்கு தெரியாது. காதல் சொல்ல வந்தேன் படவிழாவில், சில டைரக்டர்கள்தான் அப்படி சொன்னார்கள். நயன்தாரா வளர்ந்த நடிகை. அழகான நடிகை. அவர் ஒரு `சூப்பர்ஸ்டாரினி.' அவருடன் என்னை இணைத்து பேசுவதில், எனக்கு சந்தோஷம்தான்.''

``நடிப்பிலும் நயன்தாராவை நீங்கள் பின்பற்றுவீர்களா?''

``நடிப்பில், எனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். யாரையும் `காப்பி' அடிக்க மாட்டேன். நயன்தாராவின் நடிப்பு வேறு, என் நடிப்பு வேறாக இருக்கும்.''

``மேக்னா, நயன்தாரா சாயலில் இருக்கிறார் என்று பேசப்படுவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் அவரிடம் இருந்து உங்களுக்கு மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறதே, உண்மையா?''

``அப்படி மிரட்டல் எதுவும் வரவில்லை. நயன்தாரா மிக சிறந்த மனிதநேயம் உள்ளவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் ஒரு டீஸன்ட் ஆன ஆர்ட்டிஸ்ட். அப்படியெல்லாம் செய்ய மாட்டார். உண்மையில் நான், அவரை சந்தித்துப் பேசுவதில் ஆர்வமாக இருக்கிறேன்.''

``நயன்தாரா-பிரபுதேவா காதல் விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?''

``அது, அவர்கள் சொந்த விஷயம். அடுத்தவர்களின் சொந்த விஷயம் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.''

இவ்வாறு மேக்னா கூறினார்.
 புகைபடத்திற்கு இங்கே அழுத்தவும் 

Leave a Reply