பாண்டிராஜ் இயக்கும் வம்சம் படத்தில் பசு மாட்டுக்கு அசின் பெயர் வைத்துள்ளனர். கதையில் முக்கிய பாத்திரமாக வரும் இந்த பசு மாட்டை படம் முழுக்க அசின் அசின் என்றே அழைக்கின்றனர்.
அசின் ஏற்கனவே இலங்கை படப் பிடிப்புக்கு போய் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பசு மாட்டுக்கு அசின் பெயரை வைத்திருப்பது அவரை அவமதிப்பதற்காக என்று இயக்குனர் பாண்டிராஜிடம் மாலை மலர் நிருபர் கேட்ட போது மறுத்தார், அவர் கூறியதாவது:-
வம்சம் படத்தில் பசுவுக்கு அசின் பெயர் வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. கிராமப்புறங்களில் ஆசையாக வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அவரவருக்கு விருப்பமான நடிகர், நடிகைகள் பெயர்களை வைத்து அழைப்பதை பார்க்க முடியும். திரிஷா, அசின் என்றெல்லாம் நிறைய பேரின் பெயர்களை வைத்துள்ளனர். நாய்க் குட்டி, பூனைக்குட்டி, போன்றவற்றுக்கெல்லாம் இது போன்று பெயர்கள் வைத்துள்ளனர்.
அது மாதிரிதான் எனது வம்சம் படத்தின் நாயகி அவள் ஆசையாய்
வளர்க்கும் பசுவுக்கு அசினு என்று அழைப்பாள். காதலர்களுக்குள் தூது போவது போல் அந்த பசுவின் கேரக்டர்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
பசுவுக்கு அசின் பெயர் வைத்ததில் எந்த உள் நோக்கமும் இல்லை. அவரை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதை செய்யவில்லை. அசின் இந்த படத்தை பார்த்தால் பசு கேரக்டரை பார்த்து ரசிப்பார் சிரிப்பார்.
இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.
வம்சம் படத்தில் அருள்நிதி நாயகனாகவும் சுனேனா நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குனர் பாண்டிராஜ் ஏற்கனவே பசங்க ஹிட்படத்தை டைரக்டு செய்தவர்.
Friday, July 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)